கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் மெய்பாதுகாவலருக்கெதிராக முறைப்பாடு

0
200

13346851_202842403443049_5998933520632387097_nஇராஜாங்க அமைச்சர் விஜயகலாவின்  மெய்பாதுகாவலராகக் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கெதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கருகிலுள்ள தனது (மெய்பாதுகாவலர்) வீட்டில் மரம் வெட்டுவதற்கு கூலிக்கு ஒருவரை  குறித்த மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைத்துச்சென்று வேலை வாங்கிய பின்னர், அதற்குரிய ஊதியத்தினை வழங்கவில்லையெனக்கூறி, பாதிக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட  கூலியாள் தனக்கு வழங்க வேண்டிய கூலிக்குப்பதிலாக வீட்டில் தன்னால்  வெட்டப்பட்ட மரத்தினை எடுத்துச்செல்லுமாறு அமைச்சரது மெய்பாதுகாவலர் வற்புறுத்தினார்.

அதற்கு நான் (கூலியாள்) அனுமதிபத்திரம் எடுக்க வேண்டும். இல்லையேல், பொலிஸார் கைது செய்வார்கள் எனக்கூறினேன். இதற்கு கடுமையான தொனியில் தன்னை எச்சரித்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு பயந்தே இம்முறைப்பாட்டை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 27 வயதையுடைய தினேஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார்.13346851_202842403443049_5998933520632387097_n 20768099_1039299889540878_6635286285964998644_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here