அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக பிரதியமைச்சர் ஹரீஸ்?

0
208

PhotoGrid_1489525943761-480x250துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை.

அண்மைக்காலமாக பிரதியமைச்சர் ஹரீசும் அமைச்சர் ஹக்கீமும் சில விடயங்களில் முரணான கருத்துக்களைப் பரிமாறி வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் வடக்கு கிழக்கு இணைப்பு, மாகாண சபைத்தேர்தல்முறை மாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டலாம். கரையோர மாவட்ட விடயத்தில் கூட பிரதியமைச்சர் ஹரீசின் கருத்துக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு மறைமுக சவாலாக அமைந்துள்ளது.

மாகாண சபைத்தேர்தல் திருத்தச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் அமைச்சர் ஹக்கீம் அதில் முஸ்லிம்களுக்கு எந்தவிதப் பாதகமுமில்லையென்ற வகையிலான கருத்துக்களையே முன்வைத்து வருகிறார். அவ்வாறு முன் வைக்கவே சிந்தித்துமிருந்தார்.

இருந்த போதிலும், இது தொடர்பில் மு.காவைச் சேர்ந்த யாருமே எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவித்திருக்காத  நிலையில், அதிர்வு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் ஹரீஸ் இத்திருத்தச்சட்டம் பிழையானதென்ற வகையில் கருத்துத்தெரிவித்திருந்தார். அவரது சில பேச்சுக்கள் மு.கா அறிந்து கொண்டே தவறைச் செய்து விட்டதாகக் கூறியிருந்தன.

இதன் பின்னர் மு.காவின் ஆதரவாளர்கள் தங்கள் கட்சி பிழை செய்து விட்டதென்ற வகையில் உள்ளத்தில் பதிவொன்றைப் பதித்துக்கொண்டனர். இருந்த போதிலும், தங்களது கட்சியைக்காப்பாற்ற இதனை ஏற்றுக்கொண்டு வேறு வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்தனர் ( பிழையென அறிந்து கொண்டு அதனை நியாயப்படுத்துபவர்களே மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் அனைத்துக்கட்சிகளிலும் உள்ளனர்). இப்போது இதனைச் சரியென கூறுவது அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலானதாக அமைந்திருந்தது. உள்ளத்தில் பதிக்கப்படும் முதல் பதிவு மிக முக்கியமானது.

தற்போது அமைச்சர் ஹக்கீம் அதனை நியாயப்படுத்தி கருத்துத்தெரிவித்து வருகின்ற போதும், யாருமே அவரது நியாயத்தைக் கவனத்திற்கொள்ளாமை மக்கள் இவரது நியாயத்தை நோக்கும் நிலையில் இல்லையென்பதை எடுத்துக் காட்டுகிறது.

இல்லாவிட்டால், விமர்சன மழைகள் பொழிந்திருக்கும். அமைச்சர் ஹக்கீம் என்றால் இப்படித்தான் என்ற விம்பம் மக்கள் மனதில் தெளிவாகப் பதிந்து விட்டது. இவரது நியாயம் எடுபடாமல் போக பிரதியமைச்சர் ஹரீஸின் கூற்றுக்கள் பெரும் பாங்காற்றியிருந்தன. இதனை மாற்றுக்கட்சியினர் பிழையெனக்கூறுவது அரசியல் இலாபம் கொண்டதெனலாம். மு.காவின் பிரதித்தலைவரர் கூறுவதை அவ்வாறு எடுக்க முடியாதல்லவா?

பிரதியமைச்சர் ஹரீஸின் கூற்றுக்கள் அமைச்சர் ஹக்கீமை சவாலுக்குட்படுத்தியுள்ளது. அமைச்சர் ஹக்கீமுக்கு சவாலாக அமைந்தால், அடுத்தது என்ன நடக்குமென்பது யாவரும் அறிந்ததே. இவரும் மு.காவின் துரோகி முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here