கண்டி நீர் வழங்கல் திட்டத்துக்கு அடுத்தாண்டில் 56,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு-அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
238

IMG_0230பிறவ்ஸ்

கண்டி மாவட்டத்தின் குடிநீர்த்திட்டங்களுக்காக அடுத்த வருடம் 56,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் 18.5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று நீர் வழங்கல் திட்டங்கள் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்த பின்னர், தலாதுஓயா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

குண்டசாலை – ஹாரகம குடிநீர்த்திட்டத்துக்காக 23,000 மில்லியன் ரூபாவும், கண்டி வடக்கு நீர் வழங்கல் திட்டத்துக்காக 33,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இவ்விரு நீர் வழங்கல் திட்டங்கள் மூலம் 7 இலட்சம் பேர் பயனடையவுள்ளனர். மேலும், தெல்தொட்ட பிரதேசத்திற்கான குடிநீர்த்திட்டமொன்றை லூல்கந்துர நீர் வீழ்ச்சியின் நீர் மூலமாகக் கொண்டு ஆரம்பிக்கவுள்ளோம் என்றார்.

வெலம்பொட பகுதியிலுள்ள கொன்டியாதெனிய அல்டன்வத்தை பிரதேசத்தில் 3.5 மில்லியன் ரூபா செலவில் 100 குடும்பங்களுக்கும், கடுகண்ணாவையில் பலான –மொட்டான பிரதேசத்தில் 10.5 மில்லியன் ரூபா செலவில் 1000 குடும்பங்களுக்கும், முடுனேகட – தலாதுஓயா பிரதேசத்தில் 4.5 மில்லியன் ரூபா செலவில் 450 குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன. இதன் போது மதஸ்தலங்களுக்கு நீர்த்தாங்கிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, வேலுகுமார், மாகாண சபை உறுப்பினர்களான ஹிதாயத் சத்தார், மகிந்த அபயக்கோன், சாந்தானி கோங்காஹகே, காமினி விஜயபண்டார, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நயீமுல்லாஹ், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயலாற்றுப்பணிப்பாளர் மஹிலால் சில்வா, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.IMG_0152 IMG_0230

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here