நுரைச்சோலை வீட்டுத்திட்டம்..! துலங்கும் மர்மம்!!.

0
233

IMG_6695ஷிபான் BM

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை வைத்து பல வகையில் அரசியல் செய்யப்பட்டு வருகின்ற வேளையில், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் வெளிப்பாடு இவ்வாறுள்ளது.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் அமைந்துள்ள நிலம் அக்கரைப்பற்று பிரதேசத்துக்குரிய ஒரேயொரு மேட்டு நிலம். அதனளவு சுமார் 125 ஏக்கர் இதற்குள் அமைக்கப்பட்டுள்ள  வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சவுதி அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்டது.

இது ஏன் இதுவரை காலமும் கையளிக்கப்படவில்லையென வினா எழுப்பின் பலர் கூறும் விடயம், இதை முஸ்லிம்களுக்கு கொடுக்க விடாமல் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தடுத்தார் என்பதாகும்.

இதன் பின்னால் திட்டமிட்ட அடிப்படையில் இனவாதச்சதி அமையபெற்றிருக்கின்றது. இனவாதிகளான ஹெல உருமய போன்ற கட்சிகளினால் பாதிக்கப்பட்ட  முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களின் காணிகளில் கட்டி முடித்த வீடுகளை இன விகிதத்திற்கேற்ப பகிர்ந்தளிக்கக்கோரி  நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்து, வழக்கின் தீர்ப்பின் பிரகாரம்
40% முஸ்லிம்களுக்கும், 40% சிங்களவர்களுக்கும், 20% தமிழர்களுக்கும் இஎன்று பிரித்து வழங்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையை நீதிமன்றம் வழங்கியுள்ளது யாவரும் அறிந்தது.

அந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், தாம் நிரகாரிப்பதாகவும் 125 ஏக்கர் காணியும் மிகவும் தெளிவான  முறையில் முஸ்லிம் பிரதேசத்திலிருப்பதாகவும், இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சென்றடைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் இன்றுவரை இருந்து வருகின்றார்.

சிங்கள மக்களுக்கு தேவைக்கதிகமான காணிகள் இலுக்குச்சேனை தாண்டினால் இருக்கிறது. தமிழர்களுக்கான காணி ஆலையடிவேம்பு பிரதேச எல்லைகக்குள் தேவையானளவு இருக்கின்றது. நிலைமை இவ்வாறிருக்க, நம்மவர்களுக்கு இருக்கின்ற 125 ஏக்கர்  காணியிலும் அவர்களுக்கு பங்கு கொடுக்க எந்தவிதத் தேவையுமில்லை . இந்தக்காணிகளும், வீடுகளும் இப்பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமானதென்றும், அது நியாமாக முஸ்லிம்களுக்கே உரித்ததானதென்றும், அதைக்கவனமாகக் கையாள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதில் அரசியல் வியாபாரம் செய்ய வேண்டாமென அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், காணிகள் நம்மிடமிருந்தால் இதை விட பெரிய வீடுகளை அமைத்துக் கொள்ள முடியுமென்று சொல்கிறார். இந்த விடயத்தை அரசியலுக்கப்பால் சிந்தித்து, நியாத்தையும் உண்மையும் உணரச்சொல்கிறார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here