கிழக்கு மாகாணத்தின் சிறந்த தொலைபேசி இயக்குனராக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை தம்பிப்பிள்ளை சதாநாதன் தெரிவு

0
472

S1710030எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் 2015-2016ம் ஆண்டுக்கான முதலாவது சிறந்த தொலைபேசி இயக்குனருக்கான விருதினை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பெற்றுக்கொண்டது.

இனடிப்படையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தொலைபேசி இயக்குனராகக் கடமையாற்றும் தம்பிப்பிள்ளை சதாநாதன் என்பவர் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தொலைபேசி இயக்குனருக்கான விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தொலைபேசி இயக்குனருக்கான விருது முதல் தடவையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஊழியருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இந்த விருதினைப் பெற்ற இயக்குனருக்கு வைத்தியசாலை நிருவாகம் சார்பாக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக வைத்திய அத்தியட்சகர் எப்.பி.மதன் தெரிவித்தார்.S1710030 S1710037

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here