“2030ம் ஆண்டளவில் அனைவருக்கும் சமமான கல்வி” -ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் கருத்தரங்கு

S1700058எஸ்.எம்.எம்.முர்ஷித்

இலங்கைக்கான கல்வி அபிவிருத்திக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 2030ம் ஆண்டளவில் அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்துடன் கூடிய, சிறப்பான கல்வியை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கான கல்வி அபிவிருத்திக்கூட்டமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சமாதான நீதவான் எஸ்.ஐ.எம்.கபீர் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இங்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிதரன் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியதுடன், கருத்தரங்கு தொடர்பான செயற்பாடுகளும் இடம்பெற்றது.

நிலையான அபிவிருத்தியின் குறிக்கோளின் கீழ் கல்வித்துறையின் 4வது இலக்கை அடைவதற்காக சிவில் சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவித்தல் தொடர்பாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவூட்டுமுகமாக இக்கருத்தரங்கு இடம்பெற்றது.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் சபையின் புதிய நிருவாக அமைப்பொன்று உருவாக்கப்பட்டு, அதனூடாக கல்வித்துறையின் 4வது இலக்கை அடைவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாக மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஐ.எம்.கபீர் தெரிவித்தார்.S1700030 S1700031 S1700035 S1700038 S1700042 S1700047 S1700048 S1700051 S1700052 S1700054 S1700057 S1700058

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>