நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றிய ஒரு கணவான் ஜப்பார் அலி – அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

0
51

22405887_10213809552542632_2671452460550218241_n(ஹாசிப் யாஸீன்றியாத் மஜீத்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத் உறுப்பினரும்நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ரீஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்திற்கும்பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்மூத்த உறுப்பினரும்நிந்தவூர் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினருமானஎம்.ரீஜப்பார் அலிவிபத்துக்குள்ளாகிய நிலையில்வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி இன்று (12)வியாழக்கிழமை காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.

அனுதாபச் செய்தியில் அவர் மேலும்குறிப்பிடுகையில்,

ஜப்பார் அலி கட்சிக்கு நிந்தவூரில்சவால் ஏற்பட்டபோது சுயநலமின்றிதனது உடன் பிறப்பு என்றுகூடபார்க்காமல் கட்சியினை பாதுகாத்து,பலப்படுத்தும் நடவடிக்கையினைமேற்கொண்ட மூத்த போராளி.

தனது அரசியல் பொது வாழ்க்கையில்நேர்மையாக நிந்தவூர் மக்களுக்குசேவையாற்றிய ஒரு கணவான்.

கட்சியின் அம்பாறை மாவட்ட குழுவின்செயலாளராக திறன்பட செயப்பட்டுகட்சியின் செயற்பாடுகளையும்,அபிவிருத்தி பணிகள் என்பவற்றைமாவட்டத்தின் சகல ஊர்களிலும்கொண்டு செல்லும் முயற்சியில்முன்னின்று உழைத்தவர்.

எல்லோரிடமும் அன்பாகவும்மரியாதையாகவும் பலகும் இவர் நல்லகுணாலனாவார்.

அன்னாரின் மறைவில்துயருட்டிருக்கும் குடும்பத்தார்உற்றார்உறவினர்கள்கட்சியின் போராளிகள்அனைவருக்கும் என ஆழ்ந்தஅனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாருக்கு எல்லாம்வல்ல இறைவன் ஜன்னதுல்பிர்தௌஸ் எனும் உயரியசுவர்க்கத்தை வழங்கபிரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here