கட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிருள்ளவரை மிக கட்சிதமாகச் செயற்பட்டு வந்தவர் ஜப்பார் அலி சேர்-முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர்

Spread the love

IMG_20171012_081041சப்னி அஹமட்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும், ஆசிரியரும், சமூக ஆர்வலரும், சிறந்த அரசியல் வாதியும், அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு செயலாளருமான ஜப்பார் அலி சேரின் மரண செய்தியை கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன்.  இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன். என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கட்சியின் செயற்பாட்டிற்காக தனது உயிர் உள்ளவரை மிக கட்சிதமாக செயற்பட்டு வந்த அன்னார் அதிக சமூக ஆர்வல விடயங்களிலும் அதிக சமூக, மார்க்க சார் செயற்பாட்ட்டில் ஈடுபட்டு வந்தார். ஆரம்ப காலத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் வளர்சிக்கு அதிக பங்களிப்பு செய்து வந்ததுடன் சிறந்த அரசியல் வாதியாக காணப்பட்டு மக்களுக்காகவும் அதிக தியாகங்களை செய்த செம்மமே ஜப்பார் அலி சேர்..

கடந்த காலங்களில் நான் கிழக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் அதிகாமாக எனது திருகோணமலைக்காரியாலயத்திற்கு வருகை தந்து கட்சி விடயங்களை பேசிவருவதுடன் பல வகையான ஆலோசனைகளையும் எனக்கு முன் வைத்து வந்ததுடன், மக்கள் பிரச்சினைகளையும் என்னிடம் எத்தி வைத்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுத்தரக்கோருவார்.

அதுபோல், இறுதியாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட செயற்க்குழு கூட்டத்தை எமது கட்சியின் தலைவர் முன்னிலையில் பல கருத்துக்களை கூறுவதற்கு மிகவும் உந்து சக்தியாக இக்கலந்துரையாடல்களை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

நல்ல நற்பன்புகளைக் கொண்ட அன்னாரில் சுவன வாழ்வுக்கு நாம் பிராத்தித்து அன்னாரில் சகல பாவங்களையும் வல்ல இறைவன் மன்னித்து ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்க நுழைய அல்லாஹ் அருள் புரிவானாக.. ஆமீன்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*