மூத்த போராளி ஜப்பார் அலியின் மறைவு கட்சிக்கும் சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் -முன்னாள் கிழக்கு மாகாண முதலமைசசர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்

0
55

IMG_20171012_105417முஹம்மது சனூஸ்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியும்  மக்களுக்காய்  தம்மை  அர்ப்பணித்தவருமான ஜப்பார் அலியின் மறைவு  கட்சிக்கும்  சமூகத்துக்கும் ஏற்பட்ட இழப்பாகும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட்தெரிவித்தார்,

மறைந்த பெருந்தலைவர்  மர்ஹும் அஷ்ரப் அவர்களின் காலந்தொட்டு  கட்சியின் வளர்ச்சிக்காய் அரும்பாடுபட்டு   உழைத்தவர்களுள்  எம் ரீ ஜப்பார் அலியும் ஒருவர் என்பதை மறந்து விட முடியாது  என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜப்பார் அலியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்,

தொடர்ந்து அவர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜப்பார் அலியின் மரணச்செய்தியானது  எம் அனைவரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,

அண்மித்த காலப்பகுதியில் அம்பாறை  மாவட்ட மக்களின் நலன் கருதி  பல்வேறு  அபிவிருத்தித் திட்டங்களை    கௌரவத் தலைவர்  ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சினூடாகவும் நான்  முதலமைச்சராக  பதவியாற்றிய காலப்பகுதியில்  எமது  அமைச்சினூடாகவும்  பல்வேறு  திட்டங்களை  மக்களுக்காக  முன்னெடுத்தார்,

நான்  முதலமைச்சராக இருந்த  காலப்  பகுதியில்  நிந்தவூருலிருந்து   அடிக்கடி திருகோணமலையில் உள்ள எனது  அலுவலகத்துக்கு வருவார்,

அவர்  அங்கு  வந்தபோதெல்லாம்   மக்களுடைய  பிரச்சினைகளை முன்வைத்து  அதற்கான தீர்வுகளை  பெற்றுக் கொண்டாரே தவிர  ஒருபோதும்  தனிப்பட்ட பிரச்சினைகளை  முன்வைத்த்தில்லை,

அவர்  எடுத்த பிரயத்தினத்தின் காரணமாக நிந்தவூரில்  அமையப் பெறவிருக்கும்  கலாசார  மண்டபத்துக்கு ஜப்பார் அலியின் நினைவாக  அவரின பெயரை சூட வேண்டும் என்பது  எமது அவாவாகும்.

அத்துடன்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காய் அன்றைய  தலைவருடன்  இணைந்து  எவ்வாறு  பாடுபட்டாரோ அதே  போன்று  இன்றைய  தலைவருடனும்  இணைந்து  கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறுபட்ட  நடவடிக்கைளை முன்னெடுத்தமை  சுட்டிக்காட்டத்தக்கது,

அன்னாரின் மரணத்தால்  துயருற்றிருக்கும் அன்னாரின் சகோதார்ர்களான  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம்  ஹசன் அலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம் ரீ எம் நிசாம் மற்றும்  அவர்களின்   குடும்பத்தினரன்  துயரில் பங்கேற்கின்றேன்.

எல்லாம் வல்ல  அல்லாஹ்  அன்னாரின்  அனைத்துப்  பாவங்களையும் மன்னித்து  மேலான ஜன்னதுல்  பிர்தவ்ஸ் எனும்  சுவர்க்கத்தை  வழங்க வேண்டும் என பிரார்த்திப்பதாக கிழக்கு மாாகண முன்னாள் முதலமைச்சர் அல் ஹாபிழ் நசீர் அஹமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here