தமிழ்ப்பிரதேசங்களில் அதிக மதுப்பாவனையால் கல்வி பாதிக்கப்படுகின்றது-பிரதியமைச்சர் அமீர் அலி

0
48

IMG_5461எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காகச் செலவழிப்பது அதிகமாகக் காணப்படுகின்றது. இதனைத்தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப்பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரிய போரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்ப்பகுதியில் போதைப்பாவனைக்காகச் செலவழிக்கும் தொகை அதிகமாகக் காணப்படுகின்றது. இதனைப்படிப்படியாகக் குறைக்க வைக்கின்ற செயற்பாடுகளில் தாய்மார்கள் செயற்பட வேண்டும்.

இலங்கையிலே முஸ்லிம் சமூகம் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கின்றதென்றால் அவர்களின் பெரும்பான்மையானவர்கள் இடத்தில் மதுப்பாவனை குறைவாகக் காணப்படுகின்றது. ஆனால், தமிழ்ப்பகுதியில் அதிகம் காணப்படுவதால் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையில் அக்கறை காட்டுவது குறைவாகக் காணப்படுகின்றது. முஸ்லிம்கள் கல்விக்காகச் செலவழிப்பதே அதிகம் காணப்படுகின்றது.

இந்நாட்டின் சிறுபான்மை இனத்தவர்கள் அமைச்சர்களாகத்தான் வர முடியும். ஜனாதிபதியோ அல்லது பிரதமராகவோ வர முடியாது. கிடைக்கும் பதவியை வைத்துக்கொண்டு மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும். தற்போது கிழக்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் தேர்தல் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதியூடாக வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றோம். மலசலகூடம் இல்லாதவர்களுக்கு மலசலம் கூடம் அமைத்துக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் வாழ்வாதார உதவிகளை யாரும் வழங்கி இருக்கமாட்டார்கள். எக்காலத்தில் தங்களுக்கு என்ன உதவிகளை வழங்க வேண்டுமென்று நன்கறிந்து உதவிகளை வழங்கி வருகின்றோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here