ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஹைறாத் வித்தியாலய மாணவி சித்தி: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராட்டு

0
130

1-DSC00134-ஏ.எல்.டீன்பைரூஸ்-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காத்தான்குடி ஹறாத் வித்தியாலய மாணவி  தஸ்லீம் பாத்திமா 154 புள்ளிளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையினால் (10.10.2017 செவ்வாய்) ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வின் போது மேற்படி மாணவி புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் கௌரவிக்கப்படார்.

நிகழ்வில், பாடசாலை அதிபர் அஜீறா கலீல்தீன், வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா உட்பட மாணவியின் பெற்றோர்களான முஹம்மது தஸ்லீம் ஸம்ஸாத் பேகம் ஆகியோரையும் படத்தில் காணலாம்.1-DSC00134 DSC00135

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here