வாழைச்சேனையில் புலிச்சுறா கைப்பற்றல்

0
305

01எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட புலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார்.

கரைக்கு திரும்பிய படகொன்றிலிருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய புலிச்சுறா மீனொன்று புதன்கிழமை கைப்பற்றப்படுள்ளதுடன், இவ்வகை மீனினம் தடை செய்யப்பட்ட மீன் என்பது குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லையென குறித்த படகிலுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகப் பகுதியில் வைத்து இப்புலிச்சுறாவினை கைப்பற்றிய கரையோரக் காவற்படையினர் அதற்கான மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த மீனினம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனமென்பதுடன், இதனை கடல்புலி என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப்போல ஒத்திருப்பதால் புலிச்சுறா என்றும் அழைப்பதாகத் தெரிய வருகின்றது.01 20171011_124823_resized 20171012_093424_resized_1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here