"போதைப்பொருள் பாவனையிலிருந்து சமுதாயத்தை மீட்போம்" -விழிப்புணர்வுக்கருத்தரங்குகள்

0
440

01 (6)எஸ்.எம்.எம்.முர்ஷித்
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமுதாயத்தை மீட்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் தலைமையிலும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.சில்மியா தலைமையிலும் நடைபெற்றது.

இதன் போது, அந்நூர் தேசிய பாடசாலை மாணவர்களிடத்தில் விழிப்புணர்வும், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் செயலக ஊழியர்கள், பொது அமைப்புக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினருக்கான கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், வாகரைப்பொலிஸ் நிலைய உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஏ.அமீர் அலி, பள்ளிவாயல் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆயித்தியமலை பொலிஸ் நிலைய உதவிப்பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.சியாமுதீன் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமுதாயத்தை மீட்போம், சிறுவர் துஸ்பிரயோகத்தைத் தடுப்போம் எனும் தொனிப் பொருளிலான விளக்கக் கருத்துரைகளை வழங்கினார்.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here