பிரதியமைச்சர் அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் போரதீவில் வாழ்வாதார உதவிகள் வழங்கல்

0
261

IMG_5525எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதியொதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில், போரதீவுப்பற்று செயலகப்பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் 11.10.2017ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

ஏனைய அதிதிகளாக பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான எஸ்.கண்ணன், திருமதி.ஜெ.மீனா, எஸ்.ஜெகதீஸ்வரன், எஸ்.நித்தியானந்தன், எஸ்.மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது, கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டது.

இதில், அறுபத்தியொரு பேருக்கு கச்சான், எண்பத்தியொரு பேருக்கு சோளம், பத்தொன்பது பேருக்கு எண்னை விசிறும் கருவிகள், நாற்பத்தி மூன்று பேருக்கு பன்னிரெண்டு வீதம் தகரங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.IMG_5497 IMG_5500 IMG_5501 IMG_5525 IMG_5529 IMG_5531 IMG_5540 IMG_5545 IMG_5549 IMG_5557 IMG_5560 IMG_5570 IMG_5581

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here