வெகு விமர்சையாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய தேசிய பரிசளிப்பு விழா

0
345

2nd Place(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1972ஆம் ஆண்டிலிருந்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியான அறிவுக்களஞ்சியத்தின் மற்றுமொரு தேசிய ரீதியிலான பரிசளிப்பு விழா கடந்த 05ஆம் திகதி கூட்டுத்தாபன ஆனந்த சமரக்கோன் கலையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முஸ்லிம் சேவைப்பணப்பாளர் அல் – ஹாபிழ் எஸ். முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அஷ்ஷெய்க் முஹம்மது அஷ்ரப் நளீமி பிரதம அதிதியாகவும் கூட்டுத்தாபனத்தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன, உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீது, இஸ்லாமிக் புக் சென்டர் சார்பாக ரீ.எல்.எம். ஜெம்சித், எம்.எச்.எம்.ஹஸன் அதன் முகாமையாளர் முஹம்மத் கியாஸ் உட்பட உலமாப்பெருமக்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் திரண்டிருந்தனர்.

விசேட அதிதியாக அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியை முதன் முதலில் நடத்திய பெருமைக்குரிய ராவுத்தர் நெய்னா முஹம்மத், முன்னாள் முஸ்லிம் சேவைப்பணிப்பாளர் எம்.இசட் அஹமத் முன்னவ்வர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நிகழ்ச்சிகளுக்கான பிரதிப்பணிப்பாளர் நாயகம் திருமதி மதுரியும் கலந்து கொண்டார்.

இறுதிப்போட்டியில் முதலாமிடத்தை கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது. இரண்டாம், மூன்றாமிடங்களை முறையே கொட்டாரமுல்லை அல்-ஹிறா மகா வித்தியாலயமும் துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயமும் தனதாக்கிக் கொண்டன.

இந்நிகழ்வின் போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தலைவர் சுதர்ஷன குணவர்தன ராவுத்தர் நெய்னா முஹம்மத் மற்றும் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியை கடந்த 18 வருடங்களாகத் தொடர்ந்து நடத்தி வரும் ஏ. ஆர்.எம். ஜிப்ரி ஆகியோர் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீதினால் பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டனர்.

இதே வேளை உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீதின் ஒலிபரப்புத்துறையின்50 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி முஸ்லிம் சேவைப்பணிப்பாளர் எஸ். முஹம்மது ஹனிபா, அறிவிப்பாளர் ஏ. ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

ஒன்பது மாகாண சம்பியன் அணிகளுக்கும் இவற்றில் முதல் மூன்றிடங்களைப்பெற்ற அணிகளுக்கும் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வருகை தந்திருந்த அதிதிகள் வழங்கினர். இந்நிகழ்வினை ஐடியல் வர்த்தக நிறுவனம் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்தது.1.1 1 1st place 2nd Place 3rd Place

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here