ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக LTM.புர்க்கான் ஜனாதிபதியால் நியமனம்

0
301

UNP-BT - (2)(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவின் இணைத்தலைவராக கல்குடாத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளர் லெப்பைத்தம்பி  புர்க்கான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் பரிந்துரைக்கமைய இந்நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி இணைப்புக்குழுவிற்கு இணைப்பொறுப்பாளராகவும் இப்பிரதேசத்தின் அனைத்து அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டத்துக்கமைய அமுல்படுத்தவும், மேற்பார்வை செய்யவுமான பொறுப்பினையும் இந்நியமனம் வழங்குவதாகவும் இந்நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெப்பைத்தம்பி  புர்க்கான் ஐக்கிய தேசியக்கட்சியின் கல்குடாத்தொகுதியின் இணைப்பாளராக தற்போது செயற்பட்டு வருவதுடன், 1994ல் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினராகத்தெரிவாகி  உதவித் தவிசாளராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதுடன், ஐ.தே.க. கொத்தணி அமைப்பாளராகவும் பல வருடங்கள் செயற்பட்டு கட்சி மாறாமல் ஐக்கிய தேசியக்கட்சியினை கல்குடாத்தொகுதியில் வளர்க்கப்பாடுபட்டவர்.

வாழைச்சேனை அந்நூர், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான லெப்பைத்தம்பி  புர்க்கான் மீராவோடை இளைப்பாறிய  கிராம சேவையாளரான மர்ஹூம் லெப்பைத்தம்பி இளைப்பாறிய கிராம சேவையாளரான மர்ஹூம் முகம்மது சரிபின் மகள் றைஹானா வீவியின் புதல்வருமாவார்.UNP-BT - (1) UNP-BT - (2)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here