வாழைச்சேனை கடதாசி ஆலையின் உறுதி வாய்ந்த இயந்திரங்கள் செயலற்றுப்போகும் அபாயநிலை-பொறியியலாளர் எஸ்.பழனியப்பன்

Spread the love

1-IMG-20171012-WA0002ஓட்டமாவடி அ.ச.முகம்மது சதீக்
வாழைச்சேனை கடதாசி ஆலையை கடந்த வாரம் இந்திய காகித கைத்தொழில் பேட்டையின் எஸ்.வி.கம்பனி நிபுணர்கள் குழு பார்வையிட்டு தற்போது அறிக்கையினை இலங்கை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அக்குழுவின் பிரதான பொறியியலாளர் எஸ்.பழனியப்பன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேனை கடதாசி ஆலையிலுள்ள இயந்திரங்கள் ஜேர்மனிய வோய்த் கம்பனியின் ஆயட்கால உறுதி வாய்ந்த இயந்திரங்களாகக் காணப்படுவதாகவும், இதனைத்திருத்தி இன்னமும் 20 வருடங்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி பாவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இங்குள்ள இயந்திரங்கள் கடந்த மூன்று வருடங்களாக பாவிக்காத காரணத்தினாலும் மற்றும் ஒழுங்கான பாராமரிப்பின்மையின் காரணத்தினாலும் பல கோடி பெறுமதியான அவ்வியந்திரங்கள் கீழ் பகுதியிலிருந்து துருப்பிடித்து பாவிக்க முடியாத நிலைக்கு மாறக்கூடிய அபாயம் இன்னமும் சில மாதங்களில் ஏற்படலாமென்றும், இதனை தற்போதுள்ள நிர்வாக முறைமைகள் உடனடியாக தொழிற்பட்டு இவ்வியந்திரங்களைப் பாதுகாக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையானது, கிழக்கு மாகாணத்தின் பல்லாயிரக்கணக்கான வேலை செய்த இடமாகும். அது மாத்திரமல்லாது, தெற்காசியாவில் பாரிய தொழிற்சாலையாகவும் காணப்பட்டதோடு, இக்கடதாசி ஆலை மீள இயங்குவதனால் பல தொழில் வாய்ப்புகள் உருவாகுமென்பதும் குறிப்பிடத்தக்கது. 1-IMG-20171012-WA0000 1-IMG-20171012-WA0001 1-IMG-20171012-WA0002 1-IMG-20171012-WA0003 1-IMG-20171012-WA0004

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*