வடமாகாணத்தில் தேசிய உணவு உற்பத்திப்புரட்சித்திட்டம்-பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

0
296

rrrrr(அஷ்ரப் ஏ.சமத்)
“தேசிய உணவு உற்பத்திப்புரட்சி – விளைச்சல் பெறும் திட்டத்தில் ஒருமித்து எழுவோம்” என்ற திட்டத்தின் வடமாகண நிகழ்வுகள் ஒக்டோபா் 14 ஆம் திகதி வடமாகாண சபையும், தேசிய விவசாய அமைச்சும் இணைந்து வடக்கில் புத்துாாில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்நிகழ்வுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைப்பாா் என இன்று ஜனாதிபதியின் ஊடக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் வடக்கு விவசாய பணிப்பாளா் தட்சணாமூா்த்தி யோகேஸ்வரன் தெரிவித்தாா்.

மேலும், பேராதனை விவசாயத் திணைக்களத்தின் மேலதிகப்பணிப்பாளா் எஸ்.பெரியசாமி, மகாவலி அதிகார சபையின் கட்டடப்பணிப்பாளா் அஜந்தனி ஆகியோரும் இங்கு கருத்துத்தெரிவித்தனா்.

பேராதனை விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளா் கருத்துத்தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் இவ்விசேட திட்டத்தின் கீழ், நெல் உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தியை 50 வீதமாக அதிகரிக்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 25 வீட்டுத்திட்டம், 1300 ஹெக்டயர் விவசாய நிலங்கள் தரிசு நிலமாகக் காணப்படுகின்றது.  இவற்றில் 1008 ஏக்கரில் நெல் விளைச்சலை ஏற்படுத்தல், 18 ஆயிரம் ஹெக்டெயரில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தல், தற்பொழுது நாட்டிலுள்ள 2 போக விளைச்சலை 3 போகமாக மாற்றுதல்.

அத்துடன், பாசிப்பயறு விளைச்சலை வடமத்திய மாகாணத்தில் 10 ஹெக்டெயருக்கு விஸ்தரித்தல், மகளிர் விவசாயிகள் அமைப்பினை 5 இலட்சம் பேரை ஏற்படுத்தல், பாடசாலை மாணவா்கள், மத வழிபாட்டுத்தலங்களிலுள்ள நிலங்களில் தென்னைப்பயிரிடதல், 5 இலட்சம் பேருக்கு 40  ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்குதல், மாடி வீடுகளில் குடியிருப்போருக்கு சாடிகளில் மரக்கறி, கொச்சி போன்ற பயிர்களை வளா்ப்பதற்கு ஊக்குவித்தல், ஓய்வு பெற்றவா்களுக்கு அரை ஏக்கா் காணி நிலங்கள் இருந்தால் அவா்கள் சுயமாகவே அருகிலுள்ள விவசாயத் திணைக்களத்தினூடாக  மரக்கன்றுகள், ஆலோசனைகளை வழங்கி வைத்தல் என விவசாயப்பணிப்பாளா் இங்கு தெரிவித்தாா்.rrrrr

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here