எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி-பிரதம அதிதி பிரதியமைச்சர் ஹரீஸ்

IMG_0671(அகமட் எஸ். முகைடீன்)
சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழகம் நடாத்தும் எவரெடி வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு மருதமுனை மசூர் மௌலான விளையாட்டரங்கில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எவரெடி விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வாரம்பப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது டொப் ஜெ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எல்.எம். ஜபீர், முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான ஏ.ஆர். அமீர், எம்.எஸ். உமர் அலி, அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எம். இப்றாஹிம், மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் ரி. காந்தன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

16 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றும் இச்சுற்றுப்போட்டியின் ஆரம்பப்போட்டியில் சவளைக்கடை அமீர் அலி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக்கழகத்தினர் விளையாடினர்.

இவ்வாரம்பப் போட்டியில் முதல் பாதியில் 3 கோல்களையும் இறுதிப்பாதியில் 3 கோல்களையும் புகுத்தி 6:0 என்ற கோல் கணக்கில் மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

மருதமுனை மசூர் மௌலான விளையாட்டு மைதானத்தில் இரவு நேர விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் வகையில் நிரந்தர மின்னொளி கம்பங்களை அமைத்துத்தருவதாக விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இதன் போது உரையாற்றுகையில் வாக்குறுதியளித்தார். IMG_0671 IMG_0676 IMG_0694 IMG_0695 IMG_0700 IMG_0702 IMG_0704 IMG_0706 IMG_0714 IMG_0716 IMG_0719 IMG_0721 IMG_0723 IMG_0725

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>