காத்தான்குடியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்.

0
250

(ஆதிப் அஹமட்)
downloadஎதிர்வரும் 2018 ஜனவரியில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் காத்தான்குடியையும் அதனை அண்டிய பிரதேசங்களான காங்கேயனோடை, பாலமுனை, ஒல்லிக்குளம், சிகரம், கர்பலா, பூநொச்சிமுனை மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய வகையிலான விஷேட கலந்துரையாடலொன்று நாளை(15.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் உற்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
எனவே மேற்படி நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் போராளிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றேன்.
அன்புடன்
யூ.எல்.எம்.என்.முபீன்
அமைப்பாளர்,
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here