சாய்ந்தமருது உள்ளூராட்சி விவகாரம் பைசர் முஸ்தபாவை மீளவும் சந்திக்குமாறு பள்ளிவாசல் தரப்பினரை கோருகிறார் ஹக்கீம்!

0
245

downloadஇன்று காலை சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைமையிலான குழு ஓன்று சாய்ந்தமருது நகர சபை விடயம் தொடர்பாக அமைச்சர் ஹக்கீம்யை சந்திக்க சென்றிருந்தனர்.

இன்று காலை 6.30 க்கு நிந்தவூரில் அமைந்துள்ள பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்களின் காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட மரைக்காயர் ஒருவர் இந்த சந்திப்பு பற்றி விளக்குகையில்

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் “பிரதேச சபை சம்மந்தமாக” பேசியபோது தெளிவான பதில் கிடைக்காமல்; பின்னர் அவர் அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களை சந்திக்குமாறு கூறியுள்ளார். பின்னர் பள்ளிவாசல் தூதுக்குழுவினர் பிரதமரை மீண்டும் சந்திப்பதற்கு நேரம் ஒன்று எடுத்து தருமாறு கேட்டிருந்தார்கள் அதையும் அவர் செவிசாய்க்கவில்லை.

இதன் போது அங்கு பிரசன்னமாகி இருந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்து தெரிவிக்கையில் பைசர் முஸ்தபாவை சந்திப்பதை விட பிரதமர் ரணிலிடம் பேசுங்கள் என ரவுப் ஹக்கீமிடம் அந்த இடத்தில் வைத்து ஹரீஸ் கோரினார்.

கடந்த பொதுத்தேர்தலின்போது பிரதமரை கூட்டிவந்து சந்தாங்கேணி மைதானத்திலும், சாய்ந்தமருதில் பல மேடைகளிலும் தேர்தல் காலங்களில் இவர்கள் கொடுத்த வாக்குறுதி இன்று புஷ்வாணமாகி போயுள்ளமை தெளிவாகிறது.

அத்துடன் இது தொடர்பில் இதுவரைக்கும் எந்தவொரு சந்திப்பினையும் பிரதமர் ரணிலோடு நடத்தவும் இல்லை இது தொடர்பில் பேசவுமில்லை என்பது மிகவும் துல்லியமாக தெரியவருகிறது.

ஏனைய தமிழ் பிரதேசங்களுக்கு உள்ளுராட்ச்சி மன்றம் கோரும் அரசியல் பிரதிநிதிகளான மனோ கனேசன் தனது கோரிக்கையின் பின்னால் நின்று வெற்றிகொள்ளும் நிலைக்கு வந்துள்ளமையை சாய்ந்தமருது மக்கள் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.(F)

Mohamed Akmal Rosan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here