நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்துடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.

0
33

(வரிப்பத்தான் சேனை நிருபர் தமீம்)

unnamed (2)ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதியுதவியில் நற்பிட்டிமுனை ஜும்ஆ பள்ளிவாசலின் உள்ளகம் மற்றும் முற்றத்தில் தரையோடுகள் (Tiles) பதிக்கப்பட்டமைக்கு நன்றிதெரிவிக்கும் வகையில், பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று (14) சந்திப்பொன்று நடைபெற்றது.

தரையோடுகள் ((Tiles) பதிப்பதற்கு உதவி செய்தமைக்காக ரவூப் ஹக்கீமுக்கு பள்ளிவாசல் நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், நற்பிட்டிமுனை சந்தையை அபிவிருத்தி செய்து தருமாறும், கலாசார மண்டபம் ஒன்றை அமைத்து தருமாறும், நற்பிட்டிமுனையிலிருந்து மருதமுனைக்கு பயணம் செய்வதற்கான வீதியொன்றை அமைத்து தருமாறும் இதன்போதும் கோரிக்கை விடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் அவற்றை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் மத்திய குழு உறுப்பினர் கட்சியின் முக்கிஸ்தர்கள் பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.(F)unnamed (1) unnamed

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here