மிஃராஜ் இளைஞர் அமைப்பிற்கான மேலங்கி பிரதியமைச்சர் ஹரீஸினால்அறிமுகம்-

0
41

(அகமட் எஸ். முகைடீன்)
விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் சாய்ந்தமருது மிஃராஜ் இளைஞர் அமைப்பிற்கு வழங்கப்பட்ட மேலங்கி அறிமுக நிகழ்வு நேற்று  (14) சனிக்கிழமை பிரதியமைச்சரின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸினால் மிஃராஜ் இளைஞர் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக மேலங்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் நௌபர் ஏ. பாவா, மிஃராஜ் இளைஞர் அமைப்பின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.1 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here