கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் மீள்எழுச்சிக்கு வித்திட்டவர்-முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹ்மத் அவர்களே…

0
316

DSC_3496 (2)வாழைச்சேனை எம்.எச்.எம்.இம்றான்
கிழக்கின் அன்றொரு இருண்ட யுகமிருந்தது. முஸ்லிம் காங்கிரஸால் எமக்கு ஒரு இலாபமுமில்லை. அவர்கள் தேர்தல் காலத்தில் வாய் கிழியப்பேசுவார்கள். ஆனால், இறுதியில் ஒன்றுமில்லை என்றெல்லாம் கூறினார்கள்.

இப்படியிருந்த முஸ்லிம் காங்கிரஸை கிழக்கில் மீண்டும் தலைத்தோங்கச்செய்து நானும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவன் என தலை நிமிர்ந்து சொல்ல வைத்தது ஹாபிஸ் நசீர் முதலமைச்சராய் ஆட்சி செய்த பொற்காலமே என்பதில் ஐயமில்லை.

முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தியே செய்யாதெனக்கூறியவர்களுக்கு அபிவிருத்தி மழையாய் பொழிந்தது. பல்வேறு வேலைத்திட்டங்களை ஏனைய பகுதிகளிலும் இடம்பெற வழிவகுத்தார்.

கிழக்கில் மெல்ல மெல்ல தலை தூக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன ஹாபிஸ் நசீரின் ஆட்சியினால் மெல்ல மெல்ல மீண்டும் தலை சாய்ந்தன.

அந்த அச்சத்திலிருந்து விடுதலைக்கான சத்தமே வெடில்கள். தேசியத்தலைவரின் அமைச்சை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனத் தெரியாதிருந்தவர்களுக்கு அதிலிருந்து நிதிகளை எவ்வாறு பயன்படுத்துவதெனக் காட்டியவரே ஹாபிஸ் நசீர்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தில் கூட இல்லாதளவு இப்போது அதிகாரத்தின் உச்சத்திலிருக்கின்றதென்றும் கிழக்கின் பிடிமானமே முஸ்லிம் காங்கிரஸின் கையிலுள்ளதென அமைச்சர் ரவூப் ஹக்கீமே மெச்சியது இந்த ஹாபிஸ் நசீரைப்பார்த்துத் தான்.

ஆகவே, யார் என்ன சொன்னாலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை கிழக்கில் மீளத்தலை தூக்கச்செய்து, விழவிருந்த கட்சியை வீரியத்துடன் நிறுத்திய ஹாபிஸ் நசீர் அஹட்டின் திறமைக்கும் ஆளுமைக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உரிய அங்கீகாரத்தைக் வழங்க வேண்டும்.

முதலமைச்சராய் கட்சியின் மீள் எழுச்சிக்கு வித்திட்டது போல, உரிய அங்கீகாரம் இவருக்கு வழங்கப்படுமிடத்து, கட்சி எதிரிகளின் கனவுக்கோட்டைகளைத் தகர்த்து வீறு நடைபோடுமென்பது திண்ணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here