முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி எதற்காக வழங்கப்பட வேண்டும்?-சட்டோ மன்சூர் கேள்வி (வீடியோ)

0
270

கவர் போட்டோஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
முன்னாள் கிழக்கு மகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன்னர் நஸீர் அஹமட் அவர்களுடைய ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினை ஒலுவிலில் சந்தித்து வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு அவர் மறுத்தாகவும் சமூக வலைத்தளங்ககளில் பரவலாகப் பேசப்பட்டு வந்த விடயம் யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், இன்று 15.10.2017ம் திகதி ஏறாவூரில் முன்னாள் முதலமைச்சருக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டுமெனத் தெரிவித்து கருப்புக்கொடிகளும் கட்டப்பட்டு, எஸ்.எல்.எம்.சியின் தலைமையின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக வெளிவந்த விடயம் சம்பந்தமாக முன்னாள் ஸ்ரீறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதியமைச்சர் அமீர் அலியின் தற்போதைய முக்கிய அரசியல் செயற்பாட்டாளருமான சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவிக்கும் கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய தள வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

வீடியோ -சாட்டோ மன்சூரின் ஆதங்கம்: –
www.youtube.com/watch?v=sy_A3co7Vd4&feature=youtu.be
கவர் போட்டோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here