இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் விளையாட்டுபகரணங்கள் கையளிப்பு

0
253

fa01bce5-9bf5-4a10-8c50-a6e9615fd161(முகம்மட் சஜீ)
காத்தான்குடி குபா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘குபா வெற்றிக்கிண்ண’ பரிசளிப்பு விழா மற்றும் விளையாட்டுப்பொருட்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலய மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப்பணிப்பாளர் பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியெதுக்கீட்டிலிருந்து குபா விளையாட்டுக்கழகத்துக்கான விளையாட்டுபகரணங்களை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார்.

அத்துடன், குபா வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற குபா மற்றும் விக்டரி அணிகளுக்கான கிண்ணத்தை பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 1d2d3a1c-4956-46f1-b83d-859b327e836b 9c348f7e-c7d6-4ea3-a415-b294bb4d3cb4 34d1f821-0eb7-436d-a1a0-7334286176a1 52b7c3aa-62bd-43c7-933a-a7ca00fc34bf 64d51242-379d-4ad8-95fe-5005b3ce6708 ab189a4d-45ba-4402-a717-1eaf0e3c24a4 e2c54930-6a49-419b-ab80-3236a0f1d117 fa01bce5-9bf5-4a10-8c50-a6e9615fd161

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here