ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினரின் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு Dr.சித்தீக் ஒரு இலட்சம் நிதியுதவி

WhatsApp Image 2017-10-16 at 7.41.45 PMஊடகப்பிரிவு OBA QATQR

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டைச் சிறப்பிக்குமுகமாக பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் முன்னெடுத்து வரும் பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்புக்கு சவூதி அரேபியாவிலுள்ள NADA நிறுவனத்தில் வைத்தியராகப் பணி புரியும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த Dr.சித்தீக் ஒரு இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நேற்று 16.10.2018ம் திகதி திங்கட்கிழமை பாடசாலைக்கு சமூகமளித்த Dr.சித்தீக் பஸ் கொள்வனவுத்திட்ட முன்னேற்றம் மற்றும் பாடசாலையின் நிலைமை தொடர்பிலும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுடன் கேட்டறிந்து கொண்டதுடன், பஸ் கொள்வனவுத்திட்டத்திற்கான தனது பங்களிப்பான ஒரு இலட்சம் நிதியினையும் பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.ஹலீம் இஸ்ஹாக் அவர்களிடம் கையளித்தார்.

குறித்த நிதி பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதற்கான பற்றுச்சீட்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

இப்பாரிய தொகை நிதியுதவியை மனமுவந்தளித்த Dr.சித்தீக் அவர்களுக்கு  ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க கட்டார் கிளையினர் சார்பாகவும் பாடசாலை சார்பாகவும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  அதே நேரம், இந்நிதியைப் பெற்றுத்தருவதில் முயற்சியெடுத்த பாகிஸ்தானுக்கான  இலங்கை உயர்ஸ்தானிக அதிகாரி முஹம்மது அனஸ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையை மிக விரைவில் நிறைவுக்குக் கொண்டு வந்து எம்மால் வாக்களிக்கப்பட்ட பஸ் வண்டியினைக் கொள்வனவு செய்து வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்களையும் நாம் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றோம்.

கட்டாரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக குறித்த திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் எம்மால் நிறைவு செய்து கொள்ள முடியாமல் போனாலும், நாம் முன்னெடுத்த திட்டத்தை நிறைவு செய்தாக வேண்டுமெனும் நோக்கில் இந்த நிமிடம் வரை செயற்பட்டு வருகின்றோம்.

இதற்காக இத்திட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை எமது கட்டார் வாழ் பழைய மாணவர்களும் சர்வதேசமெங்கும் வாழும் பழைய மாணவர்களும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

ஆகவே, பொருளாதார வசதி படைத்த சகோதரர்கள் எமது திட்டத்திற்கு உதவ முன் வர வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் கொள்வனவுத்திட்ட நிதி சேகரிப்பு கணக்கில் இதுவரை இறுதி இருப்பாக 1,655,633 இலங்கை ரூபாய்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்கள் விளக்கங்கள் தேவைப்படுவோர் பழைய மாணவர் சங்க கட்டார்  கிளையின் கணக்காளர் எம்.பி.எம்.இஸ்ஸத் அவர்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். (MBM,இஸ்ஸத் அவர்களைத் தொடர்பு கொள்ள:  தொலைபேசி- 66031219, மின்னஞ்சல்-issath1977@yahoo.com, வட்ஸ்அப்- 66031219)WhatsApp Image 2017-10-16 at 4.16.36 PM WhatsApp Image 2017-10-16 at 7.41.45 PM WhatsApp Image 2017-10-16 at 4.14.26 PM WhatsApp Image 2017-10-17 at 10.20.12 AM

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>