அட்டாளைச்சேனை றிஸ்லியின் "முகவரி" கவிதை நூல் வெளியீடு

0
242

55சப்னி அஹமட்
படைப்பாளிகள் உலகம்-கனடா அமைப்பின் வெளியீட்டில் கவிஞர் ரிஸ்லி சம்சாட் எழுதிய “முகவரி” கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு கடந்த 15.10.2017ம் திகதி அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் கலந்து கொண்டதுடன், கெளரவ அதிதிகளாக முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான முனாஸ், அப்துல் முனாப், உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனீபா, படைப்பாளிகள் உலகம் அமைப்பின் நிறுவுனர் ஐங்கரன் உள்ளிட்டோர்களுடன் இலக்கியப்பிரமுகர்கள் எனப்பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது, கவிஞர் றிஸ்லியின் தயாருக்கும், படைப்பாளிகள் உலகம் அமைப்பின் தலைவருக்கும் கௌரவ முன்னாள் அமைச்சரினால் பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டது. 1 4 5 6 7 23 38 49 55 70 89

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here