நூறுல்ஹக்கின் "யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை?"- நூல் வெளியீட்டு விழா

0
248

பி.எம்.எம்.ஏ.காதர்

சாய்ந்தமருது பன்னூலாசிரியர் ஹாதிபுல் ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய ‘யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை’ நூல் வெளியீட்டு விழா நாளை (18.10.2017) இரவு 07.00 மணிக்கு சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது ஜும்மாஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி என்.ஆரிப் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கொழும்பு பல்கலைக்கழகம் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.முகம்மட் சதாத் பிரதம உரையாற்றவுள்ளதுடன், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் எஸ்.எம்.கலீல் மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சமூகத்தலைவர் ஏ.ஆர்.முகம்மட் அஸீம் ஆகியோர் கருத்துரையாற்றவுள்ளனர்.

இவ்விழாவில் சிறப்புப்பிரதிகள் வழங்கி வைப்பதனூடாக நூல் வெளியீட்டு வைபவம் நடைபெறும். சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டம் இந்நூல் வெளியீடு மற்றும் விழா ஏற்பாடுகளைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவினை உள்ளூர் மற்றும் சர்வதேச நண்பர்களுக்காக வியூகம் டீ.வி நேரடி ஒளிபரப்பைச் செய்யவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

IMG_20171017_180644

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here