சிறையில் அடைப்பதால் எம்மை அடக்கிவிடலாமென நினைக்க வேண்டாம் – பா.உ நாமல் ராஜபக்ஸ

0
245

unnamedசிறையில் அடைப்பதன் மூலம் எமது செயற்பாடுகளை தடை செய்யலாமென இவ்வாட்சியாளர்கள் கருதுவது பகற் கனவாகவே அமையுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்…

நான் சிறை சென்று வந்துள்ளேன்.நான் செய்த குற்றம் நட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதை எதிர்த்து நாட்டுக்காக போராடியது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மாத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுப்பதே எமது ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகவிருந்தது. நாட்டுக்காக சிறை சென்று வருவதை பெருமையாக கருதுகிறேன்.என்னோடு கைது செய்யப்பட்டவர்களில் மருந்து எடுக்க வந்தவர்களும் உள்ளடங்குவர். இது தான் நல்லாட்சியின் செயற்பாடு.

நாட்டை விற்பனை செய்யும் கொள்கையில் இருந்து நல்லாட்சி விலகும் வரை எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்னோடு அமைதி பேரணியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வரை எமது போராட்டம் மிக கடுமையாக அமையும். இப்படியான சிறையில் தள்ளும் செயற்பாடுகளை செய்வதன் மூலம் எம்மை அடக்கிவிடலாம் என இவ்வாட்சியாளர்கள் கருதுவார்களாக இருந்தால் அது பகற் கனவாவே அமையும்.(F)

joint opposition tamil media unit

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here