மட்டு.மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் புற்றுநோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்-Dr. ஏ.இக்பால்

01 (18)எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருடம் ஆயிரம் புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மார்பகப்புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.இக்பால் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மார்பகப்புற்று நோய் மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று 17.10.2017ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது மாவட்டத்தில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் புற்று நோயாளர்கள் தொகை அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிவதன் மூலம் இந்நோயிலிருந்து பாதுகாப்பை தேடிக்கொள்வதுடன், நோய் மேலும் பரவாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

இலங்கையில் கடந்த வருடம் இணங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் மொத்த தொகை இருபத்தியெட்டாயிரம், அத்தொகையை விட இந்த வருட கூடுதலாக அதிகரித்துக் காணப்படும். இந்நோய் பரப்புவதற்கு நமது உணவுப் பழக்கங்களும், பரம்பரையுமாகும்.

இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாதென்ற மனநிலையில் இருப்பதை விட, ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் குணப்படுத்தக்கூடிய வழிமுறைகள் இன்றுள்ளதென்றும் தெரிவித்தார்.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி.பாமினி அச்சுதன் தலைமையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் சிகிச்சை நிலையம் ஆகிய மூன்று இடங்களிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப்பேரணி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சென்றடைந்தது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தாய் சேய் வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.அச்சுதன், மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோய் வைத்திய அதிகாரி எஸ்.நவலோஜிதன், வாழைச்சேனை மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் இ.நிதிராஜ், மட்டக்களப்பு லயன்ஸ் கழக ஆலோசகர் ஏ.செல்வேந்திரன், வாழைச்சேனை லயன்ஸ் கழகத்தலைவர் பொ.சிறிதரதீசன், பொதுச் சுகாதாரப்பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.01 (1) 01 (2) 01 (3) 01 (4) 01 (5) 01 (6) 01 (7) 01 (8) 01 (9) 01 (10) 01 (11) 01 (12) 01 (13) 01 (14) 01 (15) 01 (16) 01 (17) 01 (18)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>