பசில் ராஜபக்ஸவுடனான முஸ்லிம்களின் சந்திப்பு

0
199

22551631_885624798271980_732579831_nஇலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரடி, மறைமுக சூழ்ச்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் சதி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு முற்போக்கு முஸ்லிம் முன்னணியின் ஏற்பாட்டில் 2017 ஒக்டோபர் 19ம் திகதி 10.30 மணிக்கு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடனான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தற்கால அரசியலில் இலங்கை முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டியதும் விழிப்புணர்வு பெற வேண்டியதுமான உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், மாகாண சபைத்தேர்தல் சீர்திருத்தம், வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தும் சூழ்ச்சியின் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள பாதிப்பு, முஸ்லிம்கள் இலங்கை பிரஜையாவதற்குரிய அடிப்படை உரிமை ஆகிய தலைப்புக்களில் விசேட கவனஞ்செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தகது.

குறித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தெளிவு பெற்றுக்கொள்ளுமாறு அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.22551631_885624798271980_732579831_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here