ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்-அமைப்பாளர் றியாழ் நம்பிக்கை

0
229

22561173_914465355368125_1967452026_oஊடகப்பிரிவு

எதிர்வரும் பிரதேச சபைத்தேர்தலை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது சம்பந்தான விஷேட கலந்துரையாடல் கடந்த 15.10.2017ம் திகதி ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இவ்விஷேட சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஹக்கீம், அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் எவ்வாறான வியூகங்கள் அமைக்கப்பட வேண்டும்? எப்படியான வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டுமென்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஆர்வங்காட்டினார்.

மேலும் குறித்த சந்திப்பில் கருத்துத்தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் அவர்கள்,

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் என்பது முழுக்க முழுக்க அப்பிரதேசங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற தேர்தலாகும். இதில் வெளியூர் அதிகாரம் பொருந்திய ஏனையவர்கள் தலையிட வேண்டிய அவசியமில்லையெனவும், கல்குடாத்தொகுதியிலுள்ள ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைக்கான வேட்பாளர் தெரிவுகளை இத்தொகுதியின் அமைப்பாளர் றியாழ் அவர்களே மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கட்சி கல்குடாத்தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள்,

ஓட்டமாவடி பிரதேச சபையை கட்சி கைப்பற்றுவதற்கான வியூகங்களை தாம் வகுத்து வைத்திருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறான சிலவற்றை தாம் வெளியிடவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அதிகமான சமூக ஆர்வளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்ததார்.

அதே போல் வாழைச்சேனை பிரதேச சபைக்கான போட்டியிலும் தாம் கூடுதலான வாக்கினைப் பெற்று கூட்டாட்சி அமைப்பதில் செல்வாக்குப் பெற முடியுமென்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்விஷேட கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர், எஸ்.ஏ.அன்வர் ஆசிரியர் ஆகியோரும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.22561126_914465162034811_318524430_o 22561173_914465355368125_1967452026_o 22561173_914465415368119_1964022042_o 22563837_914464962034831_2081271638_o 22643106_914465042034823_989707664_o 22662366_914465535368107_1352812760_o

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here