ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் வேட்பாளராக கணக்கறிஞர் HMM றியாழ்(MBA.ACA.ACMA)

0
79

received_831681053676002எஸ்.ஐ.முஹாஜிரீன் ஆசிரியர்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் வேட்பாளராக மாஞ்சோலை-பதுறியா வட்டாரத்தை மையப்படுத்தி களமிறங்குகிறார் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும், அதியுயர்பீட உறுப்பினரும், கணக்கறிஞருமான றியாழ் அவர்கள்.

கடந்த பொதுத்தேர்தலிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத்தொகுதியில் போட்டியிட்டு ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்றுக் கொடுத்து மாவட்டத்திலே கட்சி முதலிடம் கிடைக்கப் பெறுவதற்கு பெரிதும் காரணமாக இருந்த றியாழ் அவர்கள் தற்போது கல்குடாத் தொகுதி மக்கள் மத்தியிலே பெரிதும் சிலாகித்தப் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார்.

ஊழல் மற்றும் மோசடிக்குப்பேர்  போன கல்குடாத்தொகுதியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் செயற்பாடுகளினால்  மனமுடைந்து காணப்படுகின்ற மக்கள் மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவதற்காக அமைப்பாளர் சகோதரர் றியாழ் அவர்கள் களமிறங்கியே ஆக வேண்டும் என்ற வேண்டுகோளையேற்றுக் கொண்டு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிரதேச சபைத்தேர்தலிலே போட்டியிடவுள்ளார்.

அதே போன்று அவரோடு இணைந்து முன்னாள் பிரதேச சபைத்தவிசாளர், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சமுக ஆர்வளர்கள், வர்த்தகர்கள் எனப்பாரியதொரு வேட்பாளர் குழாம் தேர்தலை முகம் கொடுக்க தயார் நிலையில் உள்ளது.

எப்படியும் இம்முறை ஓட்டமாவடி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் காணப்படப் போவதில்லை.

அண்மைக்காலமாக இப்பிரதேச அரசியல்வாதியின் சுயநல செய்றபாடுகளினால் விரக்தியுற்று காணப்படுகின்ற மக்கள் அந்த அரசியல்வாதிக்கு நல்லதொரு பாடத்தினை இந்தத் தேர்தல் ஊடாக புகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here