பொலன்னறுவையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் "தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்" கருத்தரங்கு

0
279

ஹ்ஹஆரிப் எஸ்.நளீம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரசாரக்குழுவினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் தற்காலப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இம்முறை பொலன்னறுவை மாவட்டம் கதுறுவெல ஜும்ஆ மஸ்ஜிதில் இன்று 18.10.2017ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பின்வரும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
1.    மஸ்ஜித் நிருவாகிகளின் பங்களிப்பு – அஷ்-ஷைக் உமர்தீன் (ரஹ்மானி) பிரசாரக்குழுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
2.    பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் – அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
3.    உலமாக்களுக்கான சிறந்த குத்பா கரத்தரங்கு மற்றும் ஆன்மீக வழிகாட்டல்- அஷ்-ஷைக் அலியார் ரியாழி. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக்குழு உறுப்பினர்.
4.    காழிமார்கள் மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான கலந்துரையாடல் – அஷ்-ஷைக் ஹலீல். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொருளாளர்.
5.    தற்கால பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் அஷ்-ஷைக் ரிஸ்வி முப்தி தலைவர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
6.    சமூகங்களுக்கிடையான கலந்துரையாடல் சம்பந்தமான (ஆறு  புத்தகங்கள் பற்றியுண்டான தெளிவு) – PPT  – அஷ்-ஷைக் அப்துர் ரஹ்மான் – ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் இணைப்பாளர்.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

இணைப்பாளர்-பிரசாரக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here