நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக அமைக்கப்படவுள்ள வீதிகளுக்கு அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன் கள விஜயம்.

0
288

(ஆதிப் அஹமட்)

22551744_1780479868917507_1803513088_nநகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களினுடைய முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொங்கிரீற்று வீதிகளாக அமைக்கப்படவுள்ள பல்வேறு வீதிகளை தெரிவு செய்வதற்கான கள விஜயமொன்றை கடந்த சனிக்கிழமை(14.10.2017) யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் மேற்கொண்டார்.

புதிய காத்தான்குடி இஹ்ஸான் பள்ளிவாயல் மஹல்லாஹ்அன்வர் நகர், அப்ரார் நகர், நூறானியா பகுதி மற்றும் பரீட் நகர் ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ள பல்வேறு வீதிகளுக்கு நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் நியாஸ் அவர்களையும் இணைத்துக்கொண்டு விஜயம் செய்து பார்வையிட்டதோடு அங்குள்ள பொதுமக்களோடும் இது தொடர்பில் கலந்தாலோசித்தார்.இவ்விஜயத்தின் போது மரியம் பள்ளிவாயல் தலைவர், தௌபீக் JP முபாரக் உற்பட பலரும் இணைந்திருந்தனர்.(F)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here