ஏறாவூரில் மற்றொரு இரட்டைக்கொலை

0
282

சவ்நன்றி -ஏறாவூர் முஹம்மது அஸ்மி

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி முருகன் கோவில் வீதியைச்சேர்ந்த மதுவந்தி என்ற 26 வயதுத்தாயும், மதுஷன் என்ற 11 வயது மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தலைவனான கணபதிப்பிள்ளை பீதாம்பரம் என்பவர் மத்திய கிழக்கு நாடொன்றில் எட்டு வருடமாக தொழில் செய்து வருகிறார். எதிர்வரும் டிசம்பரில் நாடு திரும்பவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடவிருந்த இவர்களை இரவுத்தூக்கத்திலிருக்கும் போது, கூரை ஓட்டை அகற்றி கயிறொன்றில் வீட்டுக்குள் இறங்கியே இப்படுகொலை நடந்துள்ளது.

நேற்று பிற்பகல் தனது சகோதரியின் நகையொன்றை செங்கலடி நகைக்கடையொன்றில் ஈடுவைத்து விட்டு 60000 ரூபாய் பெற்று வந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டதோடு, அடிக்கடி கூடிய நகைககளை அணிந்து தான் வெளியில் சென்று வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 09.00 மணியளவில் இவரது வீட்டு வளவினுல் மாடு மேய்வதைக்கண்ட அருகாமையில் வசிக்கும் சகோதரியின் மகள், மாட்டை துரத்தி விட்டு, திறந்திருந்த வீட்டினுல் சென்று சித்தியை அழைத்த போது தான் சித்தியும், சித்தியின் ஒரேயொரு மகனும் படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதைக் அவதானித்து அலரிக்கொண்டு ஓடி வந்துள்ளார்.

கிராமே சேவை அலுவலருக்கும், ஏறாவூர் பொலிசாருக்கும் விடயத்தை உறவினர்கள் தெரிவித்ததால், மேலதிக நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுக்கின்றர்.

தகவல் :திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் ஹாஜியார்22519153_2049989798348158_350060485585755215_n 22519307_2049989758348162_7669123688202482411_n 22540156_2049989871681484_379343759128011377_n 22540226_2049989708348167_7810895622783076715_n

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here