அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்:எமக்கு செய்யப்பட்ட துரோகம்.

IMG_20171018_170910செம்மண்ணோடை சலீம்

ரோகிங்கிய முஸ்லிம்களுக்காக கவலைப்படும் எம் உள்ளங்கள் அவர்களுக்கு இந்நிலை வரக்காரணம் என்னவென்பது பற்றி சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை உணர மறந்து விட்டோம்.

ரோகிங்கிய முஸ்லிம்கள் பர்மாவில் சிறுபான்மையினரே. வரலாற்றை ஆராயும் போது முன்பொரு காலத்தில் பர்மாவின் செல்வந்த வாழ்க்கைக்கு உரித்தாணவர்கள்.

ஆனால், காலவோட்டத்தில் அவர்களுக்கான அரசியல் துரோகம் ஆரம்பமாகும் போது தான் அனைத்து அந்தஸ்தயும் இழந்து அநாதைகளாக இன்று கொன்று குவிக்கின்றனர் இனவாதிகள்.

அங்கு இன்று ரோகிங்கியர்களுக்கு குடியுரிமை கிடையாது. தேசிய அடையாளம் கிடையாது. பிறப்புச்சான்றிதழ் கிடையாது. அரச தொழில் கிடையாது, அரச சலுகை, ரேசன் , நிவாரனம் கிடையாது. நிலம் சொத்தும் வைத்திருக்கும் உரிமை(உறுதி) கிடையாது. எத்தணை பேர் கொள்ளப்பட்டனர் என்பதனை கணக்கெடுப்பதற்கு இறப்புப்பதிவு கூட கிடையாது.

இவ்வளவு உரிமையும் பறிபோனதற்கு ஒரே காரணம், தத்தமது பிரச்சிணைகளை எடுத்து வழி நடத்தவிருந்த அரசியல் உரிமையை இழந்ததே.

அங்கும் ரோகிங்கிய அரசியல்வாதிகள் இனவாதிகளிடம் அரசியல் அந்தஸ்த்தை இழந்தது, அவர்கள் அழிவைத்தீர்மானித்தது.

பர்மாவில் எப்படி அரசியல் உரிமை முஸ்லிம்களுக்கெதிராக தகர்க்கப்பட்டதோ. அதே போன்று எமக்கெதிராக இலங்கையில் அரசியல் திருத்தச்சட்டம் மாற்றப்பட்டது.

அதற்கு பாரபட்சமில்லாமல் எமது அரசியல் தலைமைகள் அனைத்தும் கையெழுத்திட்டு வரலாற்றுத் துரோகத்தைச்செய்து விட்டனர்.

சிலர் மிரட்டலுக்கும், சிலர் பணத்திற்காகவும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கழுத்தில் கத்தி வைக்க எமது அரசியல் தகமைகள் இடமளித்து விட்டனர்.

இது முதல் அடி தான் முஸ்லிம்களுக்கு. காலப்பேக்கில் எந்த உரிமையுமற்றவர்களாக்க இந்த நடவடிக்கை போதுமானது. எந்த மாகாண சபையும் இனி முஸ்லிம்களின் உரிமைக்கு பேசாது. ஏனெனில், துரோகிகளும் எதிரிகளுமே முஸ்லிம்களை ஆளப்போகின்றனர்.

விழிப்புடன் எம் அரசியல்வாதிகளிடம் கேள்வி  கேளுங்கள்.

அனைத்து துரோகிகளுக்கும் இது சமர்ப்பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>