பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் அல்-உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப்பாத்திரம் வழங்கி வைப்பு

0
217

IMG_20171018_184214எம்.ரீ. ஹைதர் அலி

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்புத்தொகுதி அமைப்பாளரும் ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் புதிய காத்தான்குடி அல்-உமர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப்பாத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.10.17ஆந்திகதி – செவ்வாயக்கிழமை நடைபெற்றது.

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் முகமாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓரங்கமாக பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் சொந்த நிதியினூடாக மேற்குறித்த உணவுப்பாத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.IMG_20171018_184214 IMG_20171018_184239 IMG_20171018_184308 IMG_20171018_184332

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here