அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்

0
243

IMG_20171018_191809(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாரை மாவட்ட பணிப்பாளர் கே.எல்.சுபைரின் முயற்சியினால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அம்பாரை மாவட்ட அங்கத்துவ வை.எம்.எம்.ஏ. களின் தலைவர், செயலாளர்களுக்கான விசேட ஒன்றுகூடல் நிகழ்வு பணிப்பாளர் கே.எல்.சுபைரின் தலைமையில் கல்முனை அல்தாப் ஹோட்டலில் (ஏ.எப்.சி) நடைபெறவுள்ளது.

சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. கிளையின் வழிநடாத்தலில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் தேசியத்தலைவர் தேசபந்து எம்.என்.எம். நபீல் அவர்களும் கௌரவ அதிதிகளாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் ஸஹீட் எம். றிஸ்மி, பேரவையின் தேசிய பொருளாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம். நளீம் அகியோரும், விசேட அதிதிகளாக பேரவையின் போதைப்பொருள் தடுப்புத்திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர், பேரவையின் உதவிச் செயலாளர் எம்.ஐ. உதுமாலெப்பை ஆகியோரும் கிளை அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வின் போது அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஊடாக மக்களுக்குச்செய்யப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் மற்றும் கிளை வை.எம்.எம்.ஏ களின் செயற்திட்டங்கள், சவால்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here