விட்டுக்கொடுப்பினூடாக புதிய தலைமைத்துவமொன்றினை உருவாக்க முன்னாள் உதவித்தவிசாளர் ஏ.எம்.நௌபர் முன்வருவாரா?

0
270

Untitled-1எம்.ரீ.எம்.பாரீஸ்

இலங்கையில் காணப்படும் நான்கடுக்கு அரசாட்சி முறைகளான ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி என்பனவற்றில் உள்ளூராட்சியே அடிமட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுடன் தொடர்புபட்டதாகையால், அதில் நல்லாளுகைகளை விரும்புவோர் கவனஞ்செலுத்த வேண்டியவர்களாகவுள்ளனர்.

இலங்கையில் 2015, 2016ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக மாற்றமடைந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத்தேர்தல் சீர்த்திருத்திய வகையில் தேர்தல் தொகுதி முறை மற்றும் விகிதாசார முறை இணைந்து இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது. பலமிக்க கட்சிகளின் செல்வாக்கால் முறையான ஜனநாயகப்போக்கு உடைத்தெறியப்பட்டு, தந்திரோபாய ஜனநாயக தரிசனத்தை தந்த விகிதாசார முறையில் நாடாளுமன்றத்தேர்தல் முடிவடைந்தது.

இலங்கையின் உள்ளூராட்சி சபையென்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாகவுள்ள ஆட்சியமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகர சபை, பட்டின சபை, கிராம சபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன,

பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. அவை, மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அபிவிருத்திச்சபைகள் என்பனவாகும்.

ஜனவரி 2011 இன் கணிப்பீட்டின்படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்ள மாநகர சபைகளின் எண்ணிக்கை –23, நகர சபைகளின் எண்ணிக்கை- 41, பிரதேச சபைகளின் எண்ணிக்கை – 271. இலங்கையிலுள்ள கிராமங்களின் எண்ணிக்கை – 38259 ஆகும்.

இருப்பினும், உள்ளூராட்சித்தேர்தல் பழைய வட்டார முறையும், ஓரளவு விகிதாசார முறையும் கலந்து இடம்பெறுமென ஆட்சியாளர்கள் குரல் கொடுத்து வருகின்ற நிலமை காணப்படுகின்றது.

எப்போது இந்த கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுமென்று எமது மாகாண மக்கள் எதிர்பார்த்ததைப்போல உள்ளூராட்சி மன்றத்தேர்தல் எப்போது நடைபெறுமென எமது ஓட்டமாவடி பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனா்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் பலமிக்க அரசியல்வாதியான பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லது அமைச்சர் அமீர் அலி கைப்பற்றுவார் என்ற எண்ணம் பலரிடமுண்டு அது தான் உண்மையுமாகும்.

இதற்கு உதாரணமாக அரசியலில் ஓரங்கட்டப்பட்டு வந்த  இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல அரசியல்வாதிகளின் மறுபிரவேச அரசியலுக்கும், புதிய அரசியல்வாதிகளின் தோற்றத்திற்கும் கடந்த பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளருக்கு பதவி வழங்கியதிலிருந்து வெற்றியடைந்தவர்களுக்கும் பக்கபலமாக இருந்தவர் அமைச்சர் அமீர் அலி என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

ஏமாற்று அரசியல்வாதிகளின் பின்னணியில் மாற்று அரசியல் செய்வதற்கு கறிவேப்பிள்ளையாய் பயன்படும் மேதாவிகளுக்கு மத்தியில் தான், இந்த பிரதேச சபைத்தேர்தல் அறிமுகமாகின்றது.

தமதூர் வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்து யாரையே பாராளுமன்ற உறுப்பினராக்கியும், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நம்பி அல்லது மீண்டும் ஒருவருக்கு தேசியபட்டியல் கேட்டுப்போய்  துரத்தப்பட்டவர்களெல்லாம் பிரதேச சபை அரசியலில் களமிறங்க நினைப்பது கேலிக்கூத்தாகவுள்ள விடயமாகும்.

எது எவ்வாறாயினும், பதுறியா-மாஞ்சோலை வட்டாரத்தேர்தல் வேட்பாளா் தெரிவு பற்றி சற்று நோக்குவோம்.

இக்கிராமத்தின் அமைச்சர் அமீர் அலி அவர்களின் அரசியல் நகர்வுகளை நகர்த்தியவர் முன்னாள் உதவித்தவிசாளரும் தற்போதய வாகரைப்பிரதேச சபையின் வருமான வரி மேற்பார்வை அதிகாரியுமான மதிப்புக்குரிய அலியார் முகம்மது நௌபர்.

தற்போதுள்ள சூழ்நிலைமையில் அவா் அரசியலிலிருந்து சற்று ஓய்வடைந்து, தனது பாசறையில் வளர்ந்த நபர் ஒருவருக்கு அடுத்த தலைமைத்துவப் பொறுப்பினை வழங்கலாமென்று சிந்தித்துக் கொண்டிருப்பதாக கருத்துக்களை தெரிவித்தார்.

அதற்குப் பொருத்தமான நபரைத்தெரிவு செய்யுமாறும், தமது ஆதரவாளர்களிடம் பெருமனதுடன் கோருகின்றார். இது வெறும் படமா? அல்லது உண்மை நிலவரமா?

எதுவாயினும் சகோதரர் நௌபர் அவர்கள், புதிய தலைமைத்துவத்தை உருவாக்க, விட்டுக்கொடுப்பு அரசியலைச் செய்வாராக இருந்தால், புதிய முகமொன்றை அவரின் ஆதரவில் அமைச்சர் அமீர் அலி அவர்களின் ஆசியுடன் களமிறக்க முடியும்.

அந்த வகையில், பதுறியா-மாஞ்சோலை மக்களின் விருப்பத்துக்குரியவரும், நல்ல மனிதர் பண்பானவர், சமூக அக்கரையுள்ளவர், சிறந்த தலைமைத்துவப் பண்புள்ளவர், பிரதேசவாதமில்லாத ஒருவர், எமது கிராமத்தைச் சேர்ந்தவர், படித்தவர், எமது கிராமத்தின் அபிவிருத்தி பற்றிச்சிந்திக்கக் கூடியவர், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க மட்-பதுறியாநகர் அல்-மினா வித்தியாலயத்தில் சிரேஸ்ட ஆசிரியராகக் கடமை புரியும் எம்.எஸ்.எம்.இப்றாஹிம் அவர்கள்.

இவரை எதிர்வரும் பிரதேச சபைத்தேர்தலில் களமிறக்குகின்ற சந்தர்ப்பத்தில், எதிர்த்தரப்பினரும் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுண்டு. இதே கருத்துக்களை அக்கிராமத்தின் சிவில், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இளைஞர்கள் பலரும் முன்வைக்கின்றனர்.

எது எவ்வாறாயினும், விட்டுக்கொடுப்பு அரசியலினூடாக புதிய தலைமைத்துவமொன்றினை உருவாக்க முன்னாள் உதவித்தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்கள் முன்வருவாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here