அதாவுல்லாவைச் சீண்டும் ஆசாமிகளுக்கு…

0
232

LZxmd8eஷிபான் BM

இன்றைய கிழக்கு மாகாண அரசியல் சூழ்நிலையில் அதாவுல்லாஹ்வின் வளர்ச்சி பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளது. அதனை ஜீரணிக்க முடியாத சில சக்திகள் தாம் நடுநிலையானவர்கள் என சமூகத்துக்குக் காட்டிக்கொள்ள தற்போது அதாவுல்லாவைக் கடிந்து கொள்ள தலைப்பட்டுள்ளதானது நகைப்பாக இருக்கிறது.

அரசியல் சாக்கடை தான். அதிலும் குறிப்பாக நமது முஸ்லிம் அரசியல் சாக்கடைக்குள்ளும் சல்லெடுக்க முடியாதளவு தொய்ந்து போயுள்ள நிலையில், ஏதோவொரு வகையில் இருக்கின்ற மூன்று தலைமைத்துவங்களுக்குள்ளும் இன்றைய நாட்களில் உண்மையாக நமது முஸ்லிம் சமூகத்துக்காகப் பேசி வருகின்ற தலைமைத்துவம் அதாவுல்லா மாத்திரமே! இதனை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அதிக்காரக்கதிரையை அலங்கரித்திருக்கும் இரு கட்சி சார்ந்த தலைவர்களும் இன்று சமூகத்தை அடமானம் வைத்துப்பிழைத்து வரும் சூழ்நிலையில் மகுடம் துறந்து தேர்தல் தோல்வியிலே துவண்டு போயுள்ள அதாவுல்லாவைச் சீண்டுவதற்கான மறைமுகமான காரணமாக தொக்கு நிற்பது சில விஷமிகளின் தூண்டுதலேயன்றி வேறொன்றாகவும் இருக்க முடியாது.

முஸ்லிம் அரசியியலில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று யாரும் கனவு காணலாம். மறுப்பதற்கில்லை. ஆனால், ஏதோவொரு கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்ற நமது சமூகக்கட்டமைப்பை முற்றாகச் சிதைத்து உடனே புதிதாக கட்ட நினைப்பதானது, பகற்கனவாகவே போகும். மேலும், அதற்கான எத்தனங்களை அதாவுல்லாவில் பிரயோகித்து, அவரின் சதையைப்புசித்து தொடர வேண்டிய அவசியமில்லை.

அதிலும் குறிப்பாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு மக்களையோ நமது முஸ்லிம் சமூகத்தையோ பணத்துக்காக அடமானம் வைத்து சிதைத்துக் காட்டிக்கொடுத்த தவறினை அதாவுல்லா செய்யவில்லை. மேலும், மற்றைய தலைவர்கள் இருவர் மீதும் இருக்கும் மாசுக்களில் துளியளவேனும் அவரில் இல்லையென்பதுமே நிதர்சனம்.

இந்தக்கோணங்களில் தான் இன்று நாம் எமது சமூக அரசியலை அணுக வேண்டுமே தவிர, வேறு வகைகளிலல்ல என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

தலைமைத்துவங்கள் மூன்றிலும் உண்மையான தலைமைத்துவம் அதாவுல்லா என்பது காலம் காட்டித்தரும் உண்மையாகும். அதாவுல்லாவின் தீர்க்கதரிசனமான முடிவுகளும் செயற்பாடுகளும், கொண்ட கொள்கையில் மாற்றமில்லாத செயற்பாடுகளும் இன்று பலரின் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்று வருகின்ற சூழ்நிலையில், சின்னத்தனமான அறிக்கைகளூடாக அவற்றினைச் சிதைக்க முனைவது நமது சமூகத்தின் விடிவினைத் தடுப்பதற்கான முயற்சியேயன்றி வேறொன்றாகவும் தெரியவில்லை.

ஆகவே தான், நட்போடும் பரிவோடும் பாசத்தோடும் கேட்கின்றேன். நமது நிலைப்பாடுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு தொடர்வோம். இருக்கின்றவற்றுக்குள்ளிருந்து நல்லவற்றைத் தெரிந்து தீயவற்றைப் புறந்தள்ளுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here