பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் நாத்தாண்டியவில் வீடமைப்புத்திட்டம் திறந்து வைப்பு.

0
211

(அஷ்ரப் ஏ சமத்)

555aவீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் நாடு முழுவதிலும் 200 மாதிரின் கிராமங்கள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் 43வது மாதிரிக் கிராமம் நேற்று(18) நாத்தாண்டியவில் உள்ள அசோக்கபுர வீடமைப்புத்திட்டம் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவா்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இக் கிராமத்தில் 1 ஏக்கா் நிலப்பரப்பில் 98 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகள் நிர்மாணிப்பதற்காக 12 போ்ச் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கம் 540 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. உள்ளக பாதைகள் குடிநீா் மின்சாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய பிரதமர் – முன்னைய அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் மக்களது மூன்று பரம்பரையினரை அடகு வைத்து உலக நாடுகளில் கடன்களை பெற்றுள்ளனா். நாங்கள் ஆட்சியை பொறுப்பேற்றதும் 2018 டிசம்பா் மாதத்துடன் இந்த சகல கடன்களை செலுத்திவிடுவோம். அதற்கான ஒரு சீரிய பொருளாதார திட்டம் வகுத்து கடன் சுமைகளில் இருந்து விடுபடுகின்றோம். என பிரதமா் அங்கு தெரிவித்தாா்.(F)555

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here