சிங்கள மயமாகும் கிழக்கின் அரச நிர்வாகம்-அதிர்ச்சித்தகவல்

Spread the love

சக்சச்சிவானந்தன் ஆறுமுகம்

கிழக்கு மாகாண  சபையின் கீழுள்ள பல முக்கிய அரச நிறுவனங்களின் முக்கிய பொறுப்புக்களை வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் அதிகாரிகளைப்பதவி  நீக்கி சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுனர் முன்னெடுத்து வருகின்றார்.

உயர் பதவிகளை வகிக்கும் பல தமிழ், முஸ்லிம் அதிகாரிகளுக்கு உத்தியோகப்பற்றற்ற வகையில் கிழக்கு மாகாண ஆளுனரினால் அவர்களை  பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையில் உயரிய பொறுப்பிலிருக்கும் அதிகாரியொருவர்  கூறினார்.

இதனடிப்படையில் வீடமைப்பு அதிகார சபை உள்ளிட்ட  பல முக்கிய அதிகார சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின்  அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுனரால் பதவி நீக்கப்படவுள்ளனர். குறித்த பதவிகளுக்கு கிழக்கு  மாகாண ஆளுனருக்கு  நெருக்கமான வெளி மாகாணங்களைச்சேர்ந்த சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின்  உயரதிகாரி  குறிப்பிட்டார்.

இதன் மூலம் எதிர்வருங்காலங்களில்  வழங்கப்படவுள்ள  அரச நியமனங்களின் போது, தமிழ், முஸ்லிம் மக்கள்  கணிசமாகப் புறக்கணிக்கப்பட்டு சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இதன் மூலம் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியான ரோஹித போகொல்லாகம அவர்கள்  அம்பாறையில் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பக்கமுள்ள அதிக சிங்கள வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவுக்கு மாற்றுவதற்கான உக்தியாக  இது கையாளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*