இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தேகாரோக்கியத்துக்காக பிரார்த்தனை

0
81

f3d37b78-b4a9-4f40-847f-1949e898949bஆர்.ஹசன்

திடீர் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆப்பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாசல், சிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல், ஏறாவூர் ஷாபி பள்ளிவாசல், பாலமுனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் எனப்பல்வேறு இடங்களில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆரோக்கியத்துக்காக விசேட  துஆப்பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் காத்தான்குடி மெத்தைப்பள்ளிவாயல் நிர்வாகம் என்பன இணைந்து மெத்தைப் பள்ளிவாசலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடாத்திய விசேட துஆப்பிரார்த்தனையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று, சிகரம் ஜும்ஆப் பள்ளிவாயல், ஏறாவூர் ரஹ்மத் நகர் ஷாபி பள்ளிவாயல், பாலமுனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல், புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல், பதுறிய்யா ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியவற்றிலும் நடைபெற்ற விசேட துஆப்பிரார்த்தனைகளிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன், காங்கேயனோடை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் காங்கேயனோடை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விசேட துஆப்பிரார்த்தனையிலும் அதிகளவானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 5e664289-c765-4d08-be81-37451bdb8c95 6f5d5eb8-c02d-46f7-8417-b60459dfb042 6f55fae9-ae06-4294-8662-6251d5a64973 34d87507-e2f5-4b3d-85df-d423e700f1b0 04365594-887c-4a6b-ba63-31f7d76ca7b9 ee3872bd-8a49-4abf-8564-73a195712cf4 ef5feabe-17a4-49ed-ac1b-22f18fd4098e f3d37b78-b4a9-4f40-847f-1949e898949b

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here