வாழைச்சேனை விபத்தில் ஒருவர் மரணம்: இருவருக்கு காயம்-பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன

0
184

S2150042எஸ்.எம்.எம்.முர்ஷித்
வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதியில் நேற்று 21.10.2017ம் திகதி சனிக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா பிரதேசத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வலப்பக்கமாக திரும்புவதற்கு முற்பட்ட வேளையில், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இதனுடன் மோதியதில் இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்துச்சம்பவத்தில் கிண்ணையடி நாகதம்பிரான் ஆலய வீதியைச்சேர்ந்த செல்வக்குமார் புவிதன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மரணித்தவர் பயணித்த மோட்டர் சைக்கிளைச் செலுத்தி வந்த சுங்கான்கேணி வம்மியடி வீதியைச்சேர்ந்த யோகராசா கிரிசாந்தன் (வயது 19), மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறையைச் சேர்ந்த மீன் வியாபாரி எம்.நவாஸ் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S2150010 S2150014 S2150024 S2150030 S2150034 S2150037 S2150039 S2150042 S2150043 S2150046 S2150047 S2150050 S2150056

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here