ஆசிரியர் நியமனங்களும் மெளனித்துப்போன அரசியல்வாதிகளும்

0
252

unnamed-115-720x450முஹம்மது சனூஸ்

இன்று கிழக்கு மாகாண மக்கள் மத்திய அரசிலுள்ள எமது அரசியல் தலைமைகளால் நட்டாற்றில் விடப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சியம் வேண்டும்?

மத்திய அமைச்சரவையில் பிரதியமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கும் இவர்கள், ஆசிரியர் கலாசாலையில் படிப்பை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது வாய்மூடி மௌனிகளாக இருக்கவே முடிந்துள்ளது. வெறும் அறிக்கை விட்டு மாணவர்களை அலைக்கழித்து விட்டு, அமைதியாகி விட்டனர்.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முதலமைச்சராய் இருந்த ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் மாத்திரம் தான் தனியாளாய் போராடி எமது ஆசிரியர்களை எமது மாகாணத்துக்கே கொண்டு சேர்த்தார். இன்று எமது மாகாணத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை இருக்கையில், அவர்கள் வெளி மாகாணத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல், எமது பெண் பிள்ளைகள் நான்கைந்து ஆண்டுகள் வெளியே தாய், தந்தையரைப் பிரிந்து கல்வி கற்று விட்டு, மீண்டும் வெளி மாகாணங்களில் சென்று கஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றார்கள். அன்றும் அதிகாரமிருந்து கையாலாகாத தலைமைகளாக இருந்தவர்கள், இன்றும் அதிகாரத்தில் தலையாட்டி பொம்மைகளாகவே இருக்கின்றார்கள்.

எமக்காய்ப் போராடிய மனிதரின் பதவிக்கால நிறைவை வெடில் வெடித்துக்கொண்டாடினர் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள், வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் நியமனங்களை சொந்த மாகாணத்திற்கு மாற்றித்தர கோரிக்கை முன்வையுங்கள்.

ஆளுனரிடம் ஆட்சி கிடைத்ததென மகிழ்ந்தோமே, இன்று எமது உரிமைகள் பரிக்கப்படுள்ளது. எமது அடுத்த நடவடிக்கை என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here