அனைவரது அவதானத்திற்கும்-கட்டாயம் அனுப்பி உதவுங்கள்

0
235

விடயம்: கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனை எனப் பெயரிடப்பட்ட புதிய பிரதேச சபை உருவாக்கல்

பெறுனர்: gabatti@sltnet.lk

அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும்,

தலைவர்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழு,

அரசாங்க அதிபர் காரியாலயம்,

மட்டக்களப்பு.

கோறளைப்பற்று மத்தி – வாழைச்சேனை எனப் பெயரிடப்பட்ட புதிய பிரதேச சபை உருவாக்கல்

தங்களின் மேலான கவனத்திற்கு தரும் விடயம் நமது பிரதேசத்தினதும், மக்களினதும் நீண்ட காலக்கோரிக்கையான இந்த புதிய பிரதேச சபை உருவாக்கம் மிக வரவேற்புக்குரியதாகும்.

இது சமூக வாழ்வு, பொருளாதார அபிவிருத்தி, சிறந்த நிருவாகம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

இதன் அங்கத்துவ எண்ணிக்கை 11 ஆக இருக்க வேண்டுமென்பதுடன், இது 1999 ஆம் ஆண்டு பனம்பலன ஆணைக்குழுவின் சிபார்சு, 2000 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின்படி 242 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும்,

1.வாழைச்சேனை – 206

2.வாழைச்சேனை – 206 பீ

3.வாழைச்சேனை – 206 டி

4.பிறைந்துரைச்சேனை – 206 ஏ

5.பிறைந்துரைச்சேனை – 206 சீ

6.மாவடிச்சேனை – 208 ஏ

7.செம்மண்ணோடை – 208டி

8.தியாவட்டான் – 210 சீ

9.புணாணை கிழக்கு – 211 பீ

10.ரிதிதென்ன – 211 எச்

11.காரமுனை – 211 ஜீ /2

ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்பதனையும் இவ்வாறானதொரு உள்ளூராட்சி மன்றம் விரைவாக உருவாகாது தாமதமாவது இப்பிரதேச மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்பதையும் பணிவுடன் அறியத்தருகின்றோம்.

நன்றி

(உங்களது பதவி)

(பெயர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here