கல்குடாவில் சூடு பிடித்திருக்கும் இரண்டு தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவு

0
272

22528762_1631054746928225_4174208085682427854_oறியாஸ் பாறூக்

அண்மைக்காலமாக கல்குடாவின் முஸ்லிம் பிரதேசங்களில் இரண்டு தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் தெரிவு தொடர்பான கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் சூடுபிடித்துள்ளமை அவதானிக்க முடிகிறது.

ஒன்று ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசயல் நிருவாக சபைக்கானது. மற்றயது  பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்கள் தெரிவுகள். குறிப்பாக, இந்த இரண்டிலும் நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?என்பது தொடர்பில் எம்மிடம் தெளிவு வேண்டும்.

முதலாவதாக இந்த ஊரினுடைய தலைமைத்துவத்தை வழங்கப்போகும் பிரதானமான இரண்டிற்கும் எவ்வாறானவர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டுமென்பதில் பின்வருவனவற்றை அவதானிக்க வேண்டும்

1. இவர்களது கடந்த கால வரலாறு

2. இவர்கள் தங்களது சொந்த நிறுவனம் அல்லது  தங்களது வேலை புரிகின்ற நிறுவனங்களை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள்?

3. இவர்கள் அந்த நிறுவனங்களில் ஊழலற்றவர்களாக நடந்திருக்கிறார்களா?

4. இவர்களின் ஆளுமை என்ன?

5. இவர்கள் தங்களது பொறுப்பினை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்கள். இவர்கள் மக்களுடன் நடந்து கொள்ளக்கூடிய தன்மைகள், புதிய சமூக நலத்திட்டமிடல்கள்.

குறிப்பாக, இப்பிரதேசத்தினுடைய அரசியல், பொருளாதார, கல்வி சம்பந்தமான இவர்களின் திட்டமிடல்கள் போன்றவற்றை உற்றுநோக்கி, பொறுத்தமானவர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக, அரசியல்வாதிகள் இதில் தங்களது அரசியல் கட்சிகளுக்குச் சார்பானவர்களை நிறுத்துவதை தவிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் அவர்களையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும், உங்களுடைய அரசியல்வாதி அல்லது அரசியல் கட்சி நிறுத்தியதென்பதற்காக பிழையானவர்களைத் தெரிவு செய்து கொள்ள வேண்டாம்.

எமது பிரதேசத்தினை வழி நடத்தக்கூடிய இந்த இரண்டு சபைகளுக்குமான புதிய நிர்வாகம் நான் மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய நபர்களைத்தெரிவு செய்து கொள்ள வேண்டும். இதில் நாம் தவறும் பட்சத்தில் நாளை மறுமையில் அல்லாஹ்வுக்க பதில் சொல்லியே ஆக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here