முஸ்லிம் கொலனி அல் மின்னா ஜனாஸா நலன்புரி அமைப்பின் பணி போற்றுதலுக்குரியது

0
177

IMG-20171022-WA0039ஆரிப் எஸ்.நளீம்

இறப்பு என்பது முடிவல்ல. அதுவே நித்திய மறு உலக வாழ்வுக்கான ஆரம்பம். ஒரு முஸ்லிமான சகோதரன் நோயுறுகின்ற போது, அவனை நலன் விசாரிப்பதும், அவன் இறப்பானேயானால் அவனைக் குளிப்பாட்டுவது, கபனிவது, அவனுக்காகத் தொழுவிப்பது, அவனின் ஜனாசாவை தோளில் சுமந்து சென்று நல்லடக்கம் செய்வது, அவனின் பிழைகளைப் பொறுத்தருளுமாறு இறைவனிடம் பிரார்த்திப்பது, அவனைச் சார்ந்தோரின் தலையாய கடமையாகும்.

இஸ்லாம் இதனை பர்ளு ஹிபாயா-கட்டாயக்கடமை என்கிறது.

இன்று பல்வேறு அமைப்புக்கள் பல நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் நோக்கங்களை அடையாமலே அழிந்து போவதை நாம் கண்டு வருகின்றோம். இவற்றிலிருந்து மாறுபட்ட கோணத்தில் அல் மின்னா ஜனாசா நலன்புரிச்சங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை நாம் அவதானிக்கலாம்.

கடந்த பல ஆண்டுகளாக பொலன்னறுவை மாவட்டத்தின் முஸ்லிம் கொலனி பிரதேசத்தில் இயங்கி வரும் அல் மின்னா ஜனாசா நலன்புரிச்சங்கமானது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இவ்வமைப்பானது, மரணம் சார்ந்த விடயங்களில் மட்டுமல்லாது இதர பொது நலக்காரியங்களிலும் கரிசனை காட்டி வருகின்றமை பாராட்டத்தக்கதாகும்.

மக்பரா என்று சொல்லப்படும் மையவாடியைச் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் கால் நடைகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றதாகவும் பூச்செடிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நிலையிலும் காணக்கிடைக்கின்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

மக்பராவின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்ற நாள் முதல் பல அபிவிருத்திப்பணிகளைச் செய்து வருகின்றமையினை இட்டு முஸ்லிம் கொலனி வடக்கு அல் மின்னா ஜனாசா சங்கத்தினருக்கு பிரதேச வாசிகள் நன்றி தெரிவிக்கின்றனர்.IMG-20171022-WA0038 IMG-20171022-WA0039

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here